குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, திருச்சியில் கலந்து கொள்ளும் பா.ஜ.க இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் முன் பதிவு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

நரேந்திரமோடி வரும் 26-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் “இளந் தாமரை’ – இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம்பேரை திரட்ட தமிழக பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக 5லட்சம் முன் பதிவு விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்க ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்யும் முறை திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கமலாலயத்தில், ஆன்லைன் முன் பதிவினை தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் http://modiintamilnadu.com என்ற இணையதளப் பக்கத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

Tags:

Leave a Reply