காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை "ஏமாற்றுவித்தை' என பா.ஜ.க விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையே காங்கிரஸ்கட்சி இன்னும் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகும்நேரத்தில் தற்போது புதிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இது காயத்தில் உப்பை தடவுவது போல் உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் அனைத்தும் நம்பகத்தன்மையற்றவையாக உள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அழிவுப்பாதைக்கு அக்கட்சி கொண்டுசென்றுள்ளது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் தவறிவிட்டனர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக்சவாணுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும்வாய்ப்பு அளித்துள்ளனர். ஊழல்செய்யும் தங்கள் கட்சித் தலைவர்களை காங்கிரஸ் கட்சி வெட்கமில்லாமல் காப்பாற்றிவருகிறது.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் மீட்கப்படும் என்று அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. நாட்டின் வறுமையை ஒழிப்பதில் அக்கட்சி மோசடிசெய்துள்ளது' என்று ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

Leave a Reply