பிரதமர் நரேந்திர மோடியின் "முன் மாதிரி கிராம' திட்டத்துக்கு அஸ்ஸாம் முதல்வர் தருண்கோகோய் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்துபேசியதால் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் சசி தரூர், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் என்ற பதவியை இழந்த நிலையில், தருண் கோகோய் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

"பிரதமர் மோடியின் "நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மாதிரி கிராமத்திட்டம்' (சான்ஸாத் ஆதர்ஷ் கிராம யோஜனா) பாராட்டத்தக்கது.

எனினும், நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் இந்த திட்டைத்தை செயல்படுத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாகும்' என்று தருண் கோகோய், தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவு செய்துள்
ளார்.

ஏற்கெனவே, மோடியின் "தூய்மை இந்தியா' திட்டத்தைப் பாராட்டிய தருண்கோகோய், குவாஹாட்டி நகரில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply