சிங்கப்பூரின் 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் 2014-ம் ஆண்டில் ஆசியாவின் மிக சிறந்த நபராக பிரதமர் நரேந்திர மோடியை தேர்வுசெய்துள்ளது. கடந்த ஆண்டு இவ்விருது சீன அதிபர் ஜீஜின்பிங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்டோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

'பிரதமர் பதவிக்குப் புதியவராக இருந்தாலும் மோடி ஏற்கெனவே, ஆசியாவில் முத்திரைபதித்து விட்டார். அண்டை நாடுகளை அணுகுதல், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆஸ்திரேலிய பிரதமர் டோனிஅபோட் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களை இந்தியாவுக்கு வரவேற்றுள்ளார்" என அந்த பத்திரிகையை வெளியிடும் நிறுவனமான சிங்கப்பூர்பிரஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

தனதுதேசம் மீண்டும் ஒளிர்வது குறித்து உள்நாட்டிலும் உலகளவிலும் ஆச்சரியத்தை விதைத்துள்ளார். தனக்குக் கிடைத்துள்ள பெரும் பான்மையைப் பயன்படுத்தி அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் நம்பிக்கையின் அடையாளம். அனைத்திலும் வெற்றிகிடைக்க, அவருக்கும் இந்தியாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.

Leave a Reply