1. கடந்த 26-ந் தேதி மாலையிலிருந்து, இன்று 30ந் தேதி காலை 12:00 மணி வரை பியூஷ் கோயல் கேட்ட கேள்வி “அம்மா Not Reachable” க்கு இன்னும் ஏன் பதில் சொல்லவில்லை?

2. “உதய்” திட்டம் ஏமாற்றுத் திட்டம் எனப் “பொய் பரப்பும்” நீங்கள் அந்தத் திட்டம் பற்றிப் பொது மேடையில் எங்களோடு விவாதிக்கத் தயாரா?

3. செய்யூர் அனல் மின் நிலையம் அமைக்க 2013-ல் இடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறீர்கள். 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? காங்கிரஸ் அரசிடம் கேள்வி கேட்டீர்களா?

4. மத்திய மின் துறைச் செயலாளர் P.K. பூஜாரி 15/03/2016 அன்று டெல்லியில் பேசும் போது,  “மத்திய-மாநில மந்திரிகள் பேச்சுக்கு பிறகு அடுத்தக் கட்டம் செல்லத் தயாராக இருக்கிறோம்” என்கிறார். நீங்கள் பேச்சு வார்த்தைக்குச் செல்வீர்களா?

5. உங்கள் “அம்மா” உங்களை டெல்லி அனுப்புவாரா?

6. பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டால் செல்லாமல், “நாலாந்தரம்” என்று சொல்லி அறிக்கை மட்டும் அனுப்புவீர்களா?

7. ரூபாய் 98,000 கோடி மின் துறை நஷ்டத்திற்கு யார் காரணம்?

8. கடந்த 2000 முதல் 2016 வரை ஒரு வருடம் கூட மின் துறை லாபம் ஈட்டாதது ஏன்? 

9. “உதய்” திட்டம் சரியில்லை என்றால் TNEB-ஐ நஷ்டத்திலிருந்து மீட்க உங்களின் மாற்றுத் திட்டத்தை இதுவரைக் கூறாதது ஏன்?

10. அம்மா "Not Reachable" என்று சொன்னதால் தான் TNEB-ஐ “மறுசீரமைக்க” மறுக்கிறீர்களா?

 

என்றும் தாயகப் பணியில்
எஸ்.ஆர்.சேகர்

மாநிலப் பொருளாளர்
செய்தித் தொடர்பாளர்

Tags:

Leave a Reply