லட்சக்கணக் காண மதிப்புடைய அமெரிக்க கரன்சி மற்றும் டிராப்டுகளுடன் துபாய்க்கு சென்ற பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகரை டில்லியில் வைத்து வருமாண நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் பாடகர் ராகத்பத அலிகான் துபாய் செல்வதற்க்காக தனது இசை குழுவினருடன் டில்லி வந்து கொண்டிருந்தார். இவர்

டில்லி வந்ததும் வருமானவரி நுண்ணறிவு-பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் அதிரடி சோதனையை நடத்தினர். இதில் இவரிடம் சுமார் ரூ.56 லட்சத்திற்கும் மேல் இருந்தன.

கணக்கில் காட்டபடாத இந்த பணம் குறித்து பாடகர் போதுமான தகவல் தரவில்லை . இதனை தொடர்ந்து பாடகரும் அவரது உதவியாளர் மற்றும் மானேஜர் ஆகியோரையும் போலிசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவரை விடுதலை செய்ய பாகிஸ்தான் வெளியுறவு செயலர் பாகிஸ்தான் மற்றும் இந்திய-தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விசாரணை செய்து வருகிறார். இவரை மரியாதையுடன் நடத்துவதோடு விரைவில் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

{qtube vid:=jPQ95_qUISo}

Leave a Reply