குற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவைக் கட்சியிலிருந்து  தூக்கி எறிவோம் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்ற விசாரணைக்கு நாங்கள் ரேடி   என அவர் கூறியுள்ளார்.ஆ.ராசாவின் தில்லி, சென்னை, பெரம்பலூர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடைபெறுவது ஒன்றும் பெரிதாக பேசப்படுகின்ற விஷயம் அல்ல என்றும் கூறினார்  .

ராசாவினுடைய குற்றம் நிரூபிக்க படவில்லை.குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கு  பிறகு அவரை  தூக்கி எறிவோம். அதுவரை   எதுவும் சொல்வதற்கு இல்லை என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தனது நெருங்கிய உறவினர்  லஞ்சம் வாங்கி பிடிப்பட்டதற்காக அமைச்சர் பூங்கோதை  அதிகாரிகளை மிரட்டி சர்ச்சையில் சிக்கி  முன்கதவு வழியாக வெளியே அனுப்பி  விட்டு பின் கதவு  வழியாக கூட்டிவந்து அமைச்சர் பதவி கொடுத்ததையும் .நில  மோசடி ஆள் கடத்தளில் சிக்கிய அமைச்சர் எ கே கே பி ராஜா கட்சியிலிருந்து  தூக்கி வீச  பட்டு இன்று மாவட்ட செயலாளராக வலம் வருவதையும் உலகம் பார்த்துக்  கொண்டுதான் இருக்கிறது

Leave a Reply