2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக 1.50 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் மத்திய அரசிடம் 2ஜி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை புதன் கிழமை வழங்கினார், அலைகற்றை ஒதுக்கீட்டில் 1.76லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு ௨ள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு 2008ல் செய்யப்பட்டது. 2001ம் ஆண்டின் விலை மதிப்பில் 2008ம் ஆண்டில் ஒதுக்கீடுசெய்ததால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மத்திய அமைச்சர் ராசா அமைச்சர் பதவியில் தொடர்வாரா என்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியதும் முடிவு செய்வார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முதலில் இவர் தனது சொத்தை 2001ம் ஆண்டின் விலை மதிப்பில் விற்ப்பார? என்பதை மக்கள் தான் கேட்க்க வேண்டும்

Leave a Reply