முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்_வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இதை தொடர்ந்து அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் .

2ஜி ஊழலில் ராசா கைது செய்யப்பட்ட பிறகு சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் . அவர் இதுவரை தில்லியில் உள்ள சிபிஐ,யின்  தலைமை அலுவலகத்தில் இருக்கும்  லாக் அப்பில் தான் அடைக்கப்பட்டிருந்தார்.

சிபிஐ, யின்  காவல்-முடிந்து ராசா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.அவரை  மேலும் காவலில் எடுத்து விசாரணை நடத்த  சிபிஐ அனுமதி கோராததால்  மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப  நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

{qtube vid:=3bEm4xpwaCQ}

Leave a Reply