உத்தரபிரதேசத்தில்  திருமணமான கிராமத்து பெண்னை அந்த ஊரை சேர்ந்தவாலிபர் கற்பழித்துவிட்டார். இதுபற்றி அந்த பெண்ணும் , அவரது கணவரும் ஊர் பஞ்சாயத்தில் புகார் கொடுத்தனர்.

ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்தை கூட்டினர். வாலிபரை அழைத்து விசாரித்தனர். அவர் அந்த பெண்னை கற்பழித்ததை ஒத்துக்கொண்டார்.

ஊர் பெரியவர்கள் கற்பழிப்புக்கு தண்டனையாக அந்த வாலிபரை 5 முறை செருப்பால் அடிக்கவேண்டும் என தீர்ப்பு கூறினர் .

அந்த பெண்னும் , அவரது கணவரும் தீர்ப்பை கண்டு வேதனை அடைந்தனர். இந்த விஷயம் தற்போழுது போலீ சாருக்கு தெரிய வந்துள்ளது.

Leave a Reply