மழை வருமா? புயல் வருமா? மிதமானதா வலுவானதா? என்றெல்லாம் அறிந்துக்கொள்ள பஞ்சாங்கத்தைப் பார்த்தால் போதும்! இயற்கையை ஏற்கெனவே நாம் அளந்து வைத்துள்ளோம்! எனினும் இப்போது நமக்கு புத்தியில் கோளாறு ஏற்பட்டுள்ளது! தொலை நோக்கி கருவியை நம்புகிறோம்! பஞ்சாங்கத்தைப் பார்ப்பதில்லை!

 

தொலைநோக்கியை நம்பக்கூடாது என்பதை இந்த ஏழாம் தேதி தொலைநோக்கி சொன்ன சிவப்பு எச்சரிக்கையும், பஞ்சாங்கத்தைத் தான் நம்பவேண்டும் என்பதை, சென்ற வருடம் ஏற்பட்ட பெருமழையும் நமக்கு நிரூபித்திருக்கிறது!

 

பஞ்சாங்க குறிப்புகளையும், காலண்டரில் குறிக்கப்பட்டிருந்ததையும் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்கள்!. தமிழகத்தில் பெரும்பாலும் ஆட்சியாளர்கள் சமூக விரோதிகளாகவே இருக்கிறார்கள்! அவர்கள் ஆட்சி அதிகாரத்தை எட்டிப்பிடித்தவுடன் முதலில் செய்தது அரசு நிலங்களை கையகப்படுத்தியது! இரண்டாவதாக செய்தது, அரசு நிலங்கள் கண்ணில் படாத வேளையில் நீர்நிலைகளை  கையகப்படுத்தியது! இப்படி சமூக விரோதிகளும் தெய்வத்தை நம்பாதவர்களும் பஞ்சாங்கத்தை நம்பாதவர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்ததால்தான், வழக்கமான மழையால் வழக்கத்திற்கு மாறாக பாதிப்பு ஏற்படுகிறது!

 

பாதிப்பு வந்துவிட்டதென்றால்  என்ன செய்யவேண்டும்? பரிகாரமாக நீர்நிலைகளுக்கு வழிவிட்டு விலக வேண்டும்! அதிகாரத்தில் இருக்கும் இந்த சமூக விரோதிகள், மழைக்கும் அதன் வெள்ளத்திற்கும் வழிவிட்டு ஒதுங்குவதை விட்டுவிட்டு, மழையை எதிர்த்து நிர்க்கிறார்கள்!

மழை வருகிறது என்றால் பேய் வருவதைப்போல பேசுகிறார்கள், எதிரிநாட்டு படை வருவதைப்போல எச்சரிக்கையாக இருக்கிறோம் என்கிறார்கள்!

நல்லவர்களுக்கும் இயற்கை  ஆர்வலர்களுக்கும், இந்த சமூக விரோதிகளின் நடவடிக்கை எரிச்சலையும் சிரிப்பையும் தருகிறது! மழையை எதிர்க்கொள்வது முட்டாள்தனம்! மழையை வரவேற்பதுதான் புத்திசாலித்தனம்!

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை விட்டு விலகி மழையை நாம் வரவாற்கவேண்டும்!

விட்டு விலகுவது என்றால், மதுரை நீதிமன்றத்தையும் இடிக்கநேரலாம்! கட்டப்பட்ட கட்டுமானம் அரசு கட்டிடமாக இருந்தாலும் அது நீர்தேங்கும் இடமாக இருந்தால் இடித்துத்தள்ளி, மேட்டிலே கட்டவேண்டும்! உச்ச நீதிமன்ற மதுரைக்கிளை ஏரியில்தான் கட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது!

ஒரு அரசு கட்டிடம் கட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்படுகிறதென்றால், அதில் 25 லட்சம் ரூபாயை கழக உடன்பிறப்புகள் சுரண்டிவிடும்! இந்த சுரண்டலுக்காகதான் அவர்கள் அரசு கட்டிடங்களையே கட்டுகிறார்கள்!

மேட்டிலே இருக்கும் அரசு இடங்களை இந்த கழக உடன்பிறப்புகள் ஏற்கெனவே ஆக்கிரமித்திருப்பார்கள், அல்லது ஆக்கிரமித்தவர்களிடம் பணம் வாங்கியிருப்பார்கள்! எனவே அவர்களை காலி செய்யச்சொல்லி அந்த மேட்டுப்பகுதியில் அரசு கட்டிடத்தை கட்டாமல், நீர்நிலைகளை மண்நிரப்பி மேடாக்கி அதில் அரசு கட்டிடத்தை கட்டி, ஒதுக்கிய தொகையில் 25 சதவிகிதத்தை பிடுங்கிவிடுவார்கள்! இப்போது இத்தகைய ஊழல் தொகை அரசு அலுவலர்களின் பங்கோடு சேர்ந்து 40 சதவிகிதம் என்று பேசப்படுகிறது!

 

ஆறு குழங்கள் ஏரிகளை ஆளப்படுத்துகிறோம் என சொல்லியும் கொள்ளைதான் நடக்கிறது!

 

கொள்ளையோ கொள்ளையென வருணபகவானுக்குரிய இடங்களை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, இப்போது மழையை எதிர் கொள்கிறார்களாம்!. இறைவனின் விக்கிரகங்களையே கடத்தி விற்பனை செய்தவர்கள், இப்போது வருண பகவானுக்கு நெருக்கடி கொடுத்து எதிர்க்கிறார்கள்!

 

இவர்களை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான்! குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறட்டும், தர்மத்தையும் பஞ்சாங்கத்தையும் இறைவனையும் நம்புகிற நாம்; வருணபகவானை ஆராதனை செய்து, நல்ல மழையும் வழமும் வேண்டும் என வேண்டுவோம்!

நன்றி –    குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.