ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித்மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை காங்கிரஸ் கட்சி அரசியலாக்கி வருகிறது .இந்த  சம்பவத்தை ஜாதி ரீதியிலான பிரச்னையாக சித்திரிக்க சிலர் முயலுகின்றனர்.

இந்த விவகாரத்தை அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் கட்சி கையாண்டுவருகிறது. அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி. அனுமந்தராவ் இருஆண்டுகளுக்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில், ஹைதராபாத் பல்கலைக் கழகத்துக்குள் கடந்த 4 ஆண்டுகளாக தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப் பட்டிருந்தால் ஒரு வேளை ரோஹித் சர்மாவின் தற்கொலையை தடுத்திருக்கலாம்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி  தில்லியில் செய்தியாளர்களிடம்  கூறியது:

 இநதச் சந்திப்பின்போது மத்திய அமைச்சர்கள் தாவர் சந்த் கெலாட், நிர்மலா சீதாராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply