காங்கிரஸ் அரசின் இந்து அமைப்புகளுக்கு எதிரான அணுகுமுறை குறித்து, வீடு வீடாக சென்று பொது மக்களிடையே விளக்கம் தர உள்ளதாக ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ் கூறியுள்ளார் .

மேலும் அவர் தெரிவித்ததாவது நாட்டில் நடைபெற்ற சில குண்டு வெடிப்பு சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தவறான

பிரசாரம் நடக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று பிரசாரம்-செய்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து , காவி பயங்கரவாதம் என்று சொல்கின்றனர்.

கோவில் மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிரான பிரசாரம் மூலம் இவற்றின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குலைக்க சதிநடக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மீது காவி-பயங்கரவாதம் என்று அபாண்டமான பழியை போடுவதன் மூலம், நாட்டில் நடக்கும் பல முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சியில் மத்திய அரசும் மற்றும் சில அரசியல் கட்சிகளும் ஈடுபடுகின்றன. இந்து அமைப்புகளுக்கு எதிரான மத்திய அரசின் அணுகுமுறையை மக்களிடம் விளக்க-, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாடு முழுவதும் மக்கள் தொடர்பு இயக்கத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக ராம் மாதவ் தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply