வங்க தேசத்தில் இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து மேற்குவங்க பா.ஜ.க தலைவர் ராகுல்சின்ஹா உள்ளிட்ட 7 பேர்கொண்ட குழு, இன்று கொல்கத்தாவில் உள்ள இந்தியாவிற்கான வங்கதேச துணைதூதரை சந்தித்து அறிக்கை ஒன்று கொடுத்துள்ளனர்.

இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்க தேசத்தில் மைனாரிட்டியாக உள்ள இந்துக்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்துக்களுடன் கிறிஸ்தவ மற்றும் புத்த மதத்தினரும் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கிடைத்துள்ளது.

கடந்த மாதத்திலிருந்து அவர்கள்மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் மிகவும் கவலை தருவதாக உள்ளது. இறையாண்மை உள்ள வங்க தேசத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த வன் முறைகளை ஏன் உங்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது எங்களுக்குதெரியவில்லை.

அரசியல் வன்முறைகளுக்கு அவர்கள் ஆளாக்கப்படுவதை கண்டு எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது இனவாத வன்முறையாக மாறிவிடக் கூடாது. அரசின் தூதரக அளவிலான பேச்சு வார்த்தைக்கு இதை எடுத்துச்செல்ல நாங்கள் இந்திய அரசை வற்புறுத்திவருகிறோம்.

ஒரு மாதத்திற்குள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையென்றால், “பங்களாதேஷ் சலோ” என்ற இயக்கத்தைதொடங்கி நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கதேசத்தில் கிட்டத்தட்ட 90 சதவிகித இஸ்லாமியமக்கள் வசிக்கின்றனர். மைனாரிட்டிகளாக இந்துக்கள் 8 சதவிகிதமும், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் 2 சதவிகிதமும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,

Leave a Reply