கடந்த 2002-ம் ஆண்டில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலிஷா கிலானி மற்றும் அவர் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது, அப்போது அவரது வீட்டில் இருந்து பத்து லட்சம் ரொக்கப்பணம், வைரம் பதித்த கைகடி காரம் , ரூ.10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வைரம்பதித்த கைகடிகாரத்தை பாகிஸ்தான் அரசு!.. பரிசாக தந்ததாக கிலானி தெரிவித்தார். அதற்கு வரியாக ஒரு கோடியே 73 லட்சம் கட்ட வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது. அதை எதிர்த்து வருமான வரி துறை ஆணையர் அலுவலகத்தில் கிலானி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணை-முடிவில் கோரிக்கை ஏற்கப்படவில்லை. வரி பணமாக ஒரு  கோடியே 73 லட்சதை  இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Tags:

Leave a Reply