கடந்த 37 வருட காலமாக கோமாவில் இருந்து வரும் 60 வயது நர்ஸ் அருணா ராமச்சந்திரா ஷன்பாக்கை கருணைகொலை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

அருணா ராமச்சந்திரா ஷன்பாக் மும்பையில் இருக்கும் எட்வர்ட் கிங் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார், இந்நிலையில் கடந்த 1973ம் ஆண்டு அங்கு வார்டு பாயாக

பணிபுரிந்து வந்த பார்த்தா வால்மீகி என்பவர் அருணாவை கடுமையாக தாக்கினார். பிறகு அவரை மருத்துவமனையில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்தார்,

அப்போது தலையில் ஏற்பட்ட அடியின் காரணமாக மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபட்டது. அன்று முதல் கடந்த 37வருடங்களாக கோமாவில் இருக்கிறார்

இதைதொடர்ந்து அவரை கருணை கொலை செய்ய கோரி எழுத்தாளர் ஒருவர் சுப்ரீம்

 

கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது .

அதில் உச்சநீதிமன்றம் அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதி தர மறுத்து விட்டது , மேலும் தனது தீர்ப்பில் கருணை கொலை என்பது இந்தியாவை பொறுத்தவரை சட்டத்துக்கு விரோதமானதாகும். எனவே இதை அனுமதிக்க இயலாது என தெரிவித்துள்ளது .

Tags:

Leave a Reply