ஐடிதுறைகளில் தேவைக்கும் அதிகமாக சம்பளம் கிடைப்பது காரணமாக கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பாதுகாப்புத்துறையை சேர்ந்த விஞ்ஞானிகள் சுமார் 20 பேர் தங்களின் பதவியை விட்டு விலகியுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று, இது பற்றி பாதுகாப்புதுறை அறிவியல் ஆலோசகர் விஜயகுமார் சரஸ்வத் மத்திய பாதுகாப்புதுறை மந்திரி A K அந்தோனி கூறியுள்ளதாவது- சம்பள உயர்வு, எதிர்பார்த்த சலுகை போன்றவை தனியார் ஐடி துறைகளில் கிடைப்பதே பதவி விலகலுக்கு

முக்கிய காரணமாக தெரிவித்துள்ளார்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் , எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் உள்ளவர்களே அதிகமானோர் பதவி விலகியுள்ளனர். இருப்பினும் பாதுகாப்பு துறையான (Defence Research and Development Organization- DRDO) டி ஆர் டி ஓ.,வில் எச் ஆர் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பதவி விலகிச் செல்லும் விஞ்ஞானிகளால் துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட போவதில்லை. வாய்ப்பு கிடைக்காமல் வெளியே தவித்துக்கொண்டிருக்கும் ஆர்வமிக்க இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களில் திறமையானவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு உறுதி அளிக்கப்பட சலுகைகள் வழங்கப் படாததால் 285 விஞ்ஞானிகள் தங்களின் பதவியை விட்டு விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply