அ.தி.மு.கவில் ஓரம் கட்டப்பட்டு வந்த வட சென்னை முக்கியப் புள்ளி பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. இன்று தி,மு,கவில் இணைகிறார். இது தொடர்பாக நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை தனது ஆதரவலர்களுடன் சென்று சந்தித்து பேசினார்.

அதிமுகவின் வட சென்னை மாவட்ட செயலாளராக 10 வருடங்களுக்கும் மேல் இருந்தவர் . 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்தவர்,

 

இந்நிலையில் சமீபத்தில் கட்சி பொறுப்புகலிருந்து திடீர் என நீக்கப்பட்டார் . அவரது ஆதரவாளர்ளும் தொடர்ந்து நீக்கப்பட்டு வந்தனர் .

இதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொள்கிறார்

Leave a Reply