மும்பையில் சிவசேனா கட்சிய்ன் தலைமை அலுவலகமான சேனாபவனுக்குள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்க பால்தாக்கரே ஆலோசித்து வருகிறார்.

சேனாபவன் அலுவலகத்தை தாக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்ட தகவல் தற்போது தெரியவந்துள்ளது. அமெ ரிக்காவில் பிடிபட்ட லஷ் கர்-இ-தொய்பா தீவிர வாதி டேவிட் ஹெட்லி இந்த தகவலை வெளியிட்டுள்ளான்.

ஹெட்லி மும்பையில் தங்கி இருந்து தாக்குதலுக்குரிய இடங்களை பல தடவை நோட்டமிட்டான். அப்போது அவன் சேனாபவன் கட்சி அலுவலகத்துக்கும் சென்று நோட்டமிட்டான். சேனாபவனில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்து அவன் பாகிஸ் தானுக்கு தகவல் அனுப்பி உள்ளான் இந்த தகவல்கள் சிவசேனா கட்சி தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பால்தாக்கரே உத்தரவிட்டுள்ளார் ——————————–

Tags:

Leave a Reply