பத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்த முதல் இந்திய நடிகை என்ற பெருமை ஷர்மிளா தாகூருக்கு. அது 1966-ம் ஆண்டு. அனுபமா, வக்த் படங்களின் வெற்றியில் மிதந்து கொண்டிருந்தார் 20 வயது ஷர்மிளா. அப்போது 'பிலிம்பேர்' பத்திரிகையின் 'சுதந்திர' தினச் சிறப்பிதழின் அட்டைக்கான படம் எடுக்கப்படுவதற் காக புகைப்படக்

கலைஞர் தீரஜ் சாவ்தாவின் அலுவலகத்துக்கு வந்தார் ஷர்மிளா. 'என்ன ஆடை அணியப் போகிறீர்கள்?' என்று கேட்டார் புகைப்படக் கலைஞர்.

தனது கைப்பையில் இருந்து 'டூ பீஸை' பதற்றமின்றி எடுத்துவைத்தார் ஷர்மிளா. அந்தப் படம் பெரும் பரபரப்பையும், பலத்த சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஷர்மிளாவின் 'டூ பீஸால்' ஏற்பட்ட 'அழகு நடுக்கம்', பாராளுமன்றம் வரை உணரப்பட்டது. பின்னாளில், அதே ஷர்மிளா தாகூர், சென்சார் போர்டின் தலைவரானது விந்தையான நகைச்சுவை தான்.

Leave a Reply