ஸ்மிருதி இரானிராஜாவினால் தமிழகத்தினுடைய பெயர் கெட்டு விட்டது, என்று பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் ஸ்மிருதி-இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று பாரதிய ஜனதா மகளிர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இதில் தமிழகத்திலுருந்து ஏராளமான மகளிர்-அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் தேசிய மகளிர் அணி தலைவர் ஸ்மிருதிஇரானி அளித்த பேட்டி: பல்வேறு புலவர்களையும், ஞானிகளையும் பெற்று சிறப்பான நிலையில் இருந்த தமிழகத்தின் பெயர், இன்று அலைவரிசை ஒதுக்கீட்டில் ராஜாசெய்த ஊழலால் தேவையின்றி கெட்டு போயுள்ளது. இந்த ஊழலின் மூலம், முதல்வரின் மகளும் பலன் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை ஜெ.பி.சி., விசாரணைக்கு உட்படுத்தாமல், நீர்த்து போகச் செய்வதற்கான பணிகளில், மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார். பா.ஜ., மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Leave a Reply