வரும் சனிக்கிழமைக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசின் சார்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யஉள்ளதாக உச்சநீதிமன்றத்தில் /மத்தியஅரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் தெரிவித்து இருந்தார். அதை சனிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜிஎஸ்.சிங்வி மற்றும் ஏகே.கங்குலி ஆகியோர் கேட்டு கொண்டனர். இதை அடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply