ஜம்மு-காஷ்மீரில் தேசிய கொடியை ஏற்ற பிரதமரே எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் பிரிவினைவாதிகளிடம் மத்தியஅரசு சரணடைகிறது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் .

அவர் தனது இணையதளத்தில் தெரிவித்ததாவது . “சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் என அரசு நினைத்தால் தேசிய கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிவினைவாதிகள் மீது முதலில் நடவடிக்கை

எடுக்க வேண்டும். லால் செளக்கில் அமைதியாக மற்றும் கெளரவமாக தேசியகொடியை யார் ஏற்றினாலும் அதை பாரதிய ஜனதா வரவேற்கும் .

பாரதிய ஜனதா இளைஞர் பிரிவினர் அரசியல் லாபத்திற்காக கொடி ஏற்றவில்லை. பிரிவினைவாதிகளுக்கு சவாலாகத்தான் தேசிய கொடியை ஏற்றுகின்றனர். ஆனால், மத்திய அரசு பிரிவினைவாதிகளிடம் சரணடைகிறது.” என்று தனது இணையதளத்தில் அத்வானி எழுதியுள்ளார்.

Leave a Reply