சந்திரன் பூமிக்கு அருகில் வருவதால், சுனாமியோ, பூகம்பமோ ஏற்படாது மக்கள் பீதியடைய தேவை இயில்லை என்று விஞ்ஞானிகள் விளக்கம் தந்துள்ளனர் .

பொதுவாக ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். ஆனால் நாளை வரயிருப்பது மெகா பவுர்ணமியாகும், பூமிக்கு மிக அருகில் சந்திரன் வரயிருப்ப்பதால் வழக்கத்தைவிட சற்று-பெரியதாக இருக்கும் என விஞஞானிகள் தெரிவித்துள்ளனர் . சூப்பர்மூன் என்னும் இந்த அதிசயம், 20 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ போகிறது.

சூப்பர்மூன் இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் உருவாகியுள்ளது .

பொதுவாக வானில் இதைபோன்ற அதிசயங்கள் உருவாகும்போது , எரிமலை வெடிப்பு பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்று மக்கள் கருதுகின்றனர் இதை மெய்யாக்கும் வகையில், கடந்த 12ம் தேதி ஜப்பானில் சுனாமி மற்றும் பூகம்பம் ஏற்பட்டு பேரழிவு உருவானது .

இதனை தொடர்ந்து மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். ஆனால், பூகம்பம், எரிமலை போன்ற பூமியில் உருவாகும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது என்றும் இதை பற்றி மக்கள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் சூப்பர்மூன் காரணமாக, வெப்பநிலையில் எந்த வித மாறுதலும் உருவாகாது என்றும் . கடல் அலைகள் மட்டும் வழக்கத்துக்கு மாறாக சற்று சீற்றத்துடன் இருக்கும் என்று சென்னை வானிலை மைய துணை-இயக்குநர் ராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply