இந்தியாவை 800 ஆண் டுகள் முஸ்லிம்களும், 200 ஆண்டுகள் ஆங்கிலேயரும் ஆட்சிசெய்த போதிலும் இன்று இந்தியாவில் 80 சதவீதம்பேர் இந்துக்கள் வாழ்கிறார்கள் என்றால் அதுதான் இந்து மதத்தின் முக்கியத்துவம்.

இந்துக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தவர் ஜெயேந்திரர். அமெரிக்காவின் நாசாவில் சமஸ் கிருதத்தை கண்டிப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் இங்கு அதைசொன்னால் எதிர்க்கிறார்கள். இந்தியர்களில் சாதி, மதம் வித்தியாசம் கிடையாது. நாம் அனைவரும் சமம்தான். ஆனால் கல்விதான் ஒருவரை மேன்மை படுத்துகிறது. அதை அடைய நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்

சந்திர மவுலீஸ்வர அறக்கட்டளை சார்பில் சஹஸ்ர சந்திர தரிசனம் என்னும் ஆயிரம் பிறை கண்டு 80 வயதை அடைந்துள்ள காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை கவுரவிக்கும் விழா காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. அந்த . விழாவில் பா.ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேசியதாவது:-

Leave a Reply