ராஜாவிடம்  சி.பி.ஐ., இன்னும் விசாரணை நடத்தாதது ஏன்? சுப்ரீம் கோர்ட்ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் தொலை தொடர்புத் துறை செயலரிடம் சி.பி.ஐ., இன்னும் விசாரணை நடத்தாதது ஏன்? இவர்கள் இருவரையும் பற்றி மத்தியலஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை மற்றும் ஆடிட்டர்ஜெனரல் அலுவலகத்தின் அறிக்கையிலும் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தும், அவர்களிடம் சி.பி.ஐ., விசாரணையை நடத்த தவறிவிட்டது என்று சிபிஐ,யிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆடிட்டர்-ஜெனரல் அலுவலகம் என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட ஓர் உயரிய அமைப்பு ஆகும் . எட்டாயிரம் ஆவணங்களை ஆய்வு செய்ததாக கூறுகிறீர்கள். ஆனால், தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தவரிடமோ அல்லது தொலைத்தொடர்பு துறை செயலரிடமோ விசாரணையை இன்னும் நடத்தவில்லை. இதை பற்றி கேட்டால், சுற்றி வளைத்து பேசுகிறீர்கள்.
மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் பயன் பெற்றதாக ஊழல்கண்காணிப்பு ஆணையம் சுட்டிக்காட்டி இருந்த 2 நிறுவனங்களின் பெயர்களை-சேர்க்காதது ஏன். இந்த நிறுவனங்கள் 1,500 கோடி மற்றும் 1,600 கோடி ரூபாய்க்கு லைசென்ஸ் வாங்கிவிட்டு, சில நாட்களில் தங்களது பங்குகளை 6 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் விற்று லாபம் பார்த்துள்ளன. இவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வராதது ஏன்? என நீதிபதிகள் கூறினர்.

Tags:

Leave a Reply