நாட்டில் ஊழலுக்கு எதிரான போரில் அரசியல்கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பங்கு கொள்ள வேண்டும் என பீகார் துணை முதல் மந்திரி சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார் .

அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்ததாவது : தற்போது நாட்டில் ஊழலுக்கு எதிராக போர் நடைபெறுகிறது .

இதில் அரசியல் கட்சிதொண்டர்களும், பொதுமக்களும் பங்கு கொள்ள வேண்டும்.

இரு தரப்பும் இணைந்து செயல்பட்டால் தான் நாட்டில் ஊழல்பரவுவதை தடுக்க இயலும் . லஞ்ச ஒழிப்பு துறையினர் மட்டும் இந்த பணியை செய்ய முடியாது . மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்..

Leave a Reply