வரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவையில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பிரசாரம் செய்யவிருக்கிறார்.

இது தொடர்பாக் கட்சியின் மாநில துணை தலைவர் எம். சின்னராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ,

கோவை, திருப்பூர் மாவட்டங்களில்-போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம்செய்ய மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் வரும் வியாழக்கிழமை மாலை 3மணிக்கு கோவை வருகிறார்.

வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருப்பூர்-டவுன்ஹால் திடலிலும், இரவு 7மணிக்கு கோவை சிவானந்தா-காலனியிலும் நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கு பெற்று பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply