காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் குடியரசு தினத்தன்று தேச கொடியை எற்றச் சென்ற பாஜகவினரின் ஏக்தா யாத்ரா, காஷ்மீரின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது . ஏக்தா யாத்ரா யாத்ராவிற்கு தலைமையேற்ற சுஷ்மா சுவராஜ், அருண் ஜெயிட்லி ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாஜகவினரின் ஏக்தாயாத்ரா எனப்படும் தேசிய ஒருமைப்பாட்டு யாத்திரை நாளை லால்சௌக் சென்றடைய திட்டமிடபட்டிருந்தது .

இதற்காக நேற்று காஷ்மீர் வந்த பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் காஷ்மீர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாநில எல்லையில் கொண்டு போய் விடபட்டனர் . இதை தொடர்ந்து இன்று அங்கிருந்து ஜம்முகாஷ்மீருக்குள் ரதயாத்திரை நடத்த திட்டமிடபட்டது. பாரதிய ஜனதா தலைவர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில்ஏறி பேரணியாக சென்றனர். காஷ்மீருக்குள் நுழைய முற்பட்டபோது பாஜக வின் மக்களவை தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை தலைவர் அருண்ஜெயிட்லி, அனந்த் குமார், மற்றும் இளைஞர் பிரிவு தலைவர் அனுராக்தாக்கூர் ஆகியோர் லக்கான்பூரில் கைது செய்யப்பட்டடுள்ளனர் .

தேசக்கொடிகளை எரிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கபடுகிறது . அதனை ஏந்தி செல்பவர்கள் கைதுசெய்ய படுகிறோம் இது ஒரு மிகபெரிய வரலாற்று தவறு’ என சுஷ்மா சுவராஜ் கருது தெரிவித்துள்ளார்

{qtube vid:=3-1PGNlIHHs}

Leave a Reply