ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக சுப்ரமணிய சுவாமியின் புகார் மனு ஏற்கத்தக்கதே என்று மத்திய புலனாய்வுக் கழக சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அலைக்ற்றை ஊழல் வழக்கில் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவிற்கு எதிராக தன்னை அரசு வழக்குரைஞராக நியமிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கோரியிருந்தார் , இந்த மனு இன்று விசாரணைக்காக வந்தது.

இதில் கருத்து தெரிவித்த நீதிபதி பிரதீப் சத்தா இவ்வழக்கில் சுவாமியின் மனு விசாரணைக்கு தக்கதே என கருத்து தெரிவித்தார் .

ஆனால் ஒரே நேரத்தில் புகார் கொடுப்பவராகவும் , அரசுதரப்பு வழக்குரைஞராகவும் இருக்க முடியாது என நீதிபதி பிரதீப் சத்தா கூறினார்.

இதற்க்கு பதிலளித்த சுப்ரமணியன்சுவாமி, நான் இரண்டு பணியை கேட்கவில்லை. புகார்தாரராக-எனது தரப்பை முன்மொழிவேன், பிறகு இந்த ஊழலில் குற்ற்ம் சுமத்தபட்டவர்க்கு எதிராக பொது வழக்குரைஞராக செயல்பட்டு நீதிமன்றத்திற்கு உதவுவேன்” என தெரிவித்தார் .

Leave a Reply