வியட்நாம் பிரதமரின் இந்தியபயணம் இருநாட்டு உறவில் புதிய சக்தியை தந்துள்ளது, வியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட் மூலம் ஏவப்படும்.என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வியட்நாம் பிரதமர் நிக்யூன் டான் டங் இந்தியா வந்துள்ளார். டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் பின்னர் இருநாடுகளுக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வியட்நாம் நாடுகள் எதிர் காலத்தில் ஒன்றிணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. வியட்நாமிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகவழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வியட்நாம் ராணுவத்தை நவீனப்படுத்துவதுவதற்கு இந்தியா உதவும். வியட்நாம் பிரதமரின் இந்தியபயணம் இரு நாட்டு உறவில் புதியசக்தியை கொடுத்துள்ளது. மேலும், விண்வெளி துறையில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதன்படி, வியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ராக்கெட் மூலம் ஏவப்படும். ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவுதெரிவித்த வியட்நாமுக்கு நன்றி. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Leave a Reply