காங்கிரஸ் கட்சியிலிருந்து இளங்கோவன் விலகி, தனி கட்சி ஆரம்பித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்,” என்று , பாரதீய ஜனதா , மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் :

 

ஸ்பெக்ட்ரம் ஊழலில் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது . இது ஒரு கூட்டு கொள்ளை என்பதால்தான் நடவடிக்கை எதுவும் எடுக்காமல், சி.பி.ஐ.ரெய்டு என்று கண்துடைப்பு நாடகம் நடத்தி, காங்கிரஸ் அரசு மக்களை ஏமாற்றி வருகிறது .

முதல்வர் கருணாநிதி ஏழைகள் இருக்கும் வரை இலவசம் கொடுக்கப்படும்’ என்று சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்தார் , “. ஏழ்மை இல்லாத நிலைமை உருவாக வேண்டும் என்றால், தமிழகத்தில் தி.மு.க., அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஏழைகள் கையேந்தும் நிலை என்றும் நீடிக்கும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க, 1977 .ம் ஆண்டில் ஒன்று திரண்டது போல் , தி.மு க.வை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் ஓர் அணியாக திரள்வது காலத்தின்கட்டாயமாக இருக்கிறது . அதே நேரத்தில், பாரதீய ஜனதா தன் சொந்தபலத்தில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. பாரதீய ஜனதா, ஆட்சிக்கு வரும் போழுது , கட்டாயம் அனைத்து ஜாதி மக்களை கொண்ட அறவோர் குழு அமைத்து, கோவில்கள் பாதுகாக்கப்படும்.

இளங்கோவன் தற்போது, “தி மு க., – காங்கிரஸ்., கூட்டணி விரும்பதகாத கூட்டணி’ என்று , பேசி வருகிறார். தி மு க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் ., விலகவில்லை என்றல் மூப்பனார் போல் , இளங்கோவன், தனி கட்சி துவங்கி மக்களுக்கு நன்மை செய்வார் என்று நம்புகிறேன்.என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .

Leave a Reply