காங்கிரஸ் வேட்பாளர்-பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவின் உருவபொம்மையை எரித்து இளைஞர்-காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

காங்கிரஸ் எஸ்சி. எஸ்டி. பிரிவு மாநில தலைவர் , செங்கை

செல்லப்பா திரு.விக. நகர்(தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பமனு தந்திருந்தார் . ஆனால், இந்த தொகுதிக்கு டாக்டர் சி. நடேசன் வேட்பாளராக-அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம்-தெரிவித்து செல்லப்பாவின் ஆதரவாளர்கள்-சத்தியமூர்த்தி பவனில் ரகளையில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த தங்கபாலுவின் உருவ படத்தை அடித்து நொறுக்கினர்.

Leave a Reply