அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நடிகர் சரத்குமார், வட்டார நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் அதிமுக பொது செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் வீட்டுக்குசென்று தொகுதிப்பங்கீடு தொடர்பாக அவருடன்

ஆலோசனை மேற்கொண்டார் .

அப்போது, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர்.பிறகு செய்தியாளகளை சந்தித்த சரத்குமார் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதிமுக, தங்களுக்கும் அழைப்பு விடுக்கும் என மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை காத்திருகின்றன .

Leave a Reply