குஜராத் கலவரத்தை வைத்து குளிர்காய்ந்து, பெயரெடுத்து , வயிறு வளர்த்து வந்த தீஸ்தா செதல்வாட் என்ற ஒரு பெண்மணியின் சமுக சேவகி வேடம் களைந்து விட்டதே!. அவரது குள்ள நரித்தனம் வெளிப்பட்டு விட்டதே!.

குஜராத்த்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பயங்கர மதக்கலவரம் மூண்டது. இதில் துரதிர்ஷ்ட்ட வசமாக 790 இஸ்லாமியர்களும் , 254 இந்துக்களும் பலியாகினர்.

ஆனால் இதைவைத்து அரசியல் ஆதாயம் அடையவும் , பெயரேடுக்கவும் , பணம் சேர்க்கவும் ஒரு பெரும் கூட்டமே கிளம்பியது . இதில் ஒருவர்தான் தீஸ்தா செதல்வாட் . 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு முன்பு வரை இவர் மும்பையில் ஒரு சாதாரண பத்திரிக்கையாளர் மட்டுமே . ஆனால் குஜராத் கலவரத்துக்கு பிறகு மோடி மீது அவதூறுகளை கிழப்பியதன் மூலம் பணமும் புகழும் இவரே எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் வந்து குவிந்து இவரை உச்சத்துக்கே கொண்டு சென்றுவிட்டது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பற்றி தப்பு தப்பாக பேசினால் பணமும் புகழும் தருமாரக ஏறுகிறதே ருசிகண்ட பூனை சும்மா இருக்குமா கடந்த பத்து வருடமாக இதைத்தான் செய்துவருகிறார்.

கலவரத்தால் பாதிக்க பட்ட அப்பாவிகள்தான் இவரது ஒரே துருப்பு சீட்டு , அவர்களுக்கு சட்ட உதவி செய்கிறேன், நிதி உதவி செய்கிறேன், வீடு கட்டித் தீஸ்தா செதல்வாட்தருகிறேன் என்ற போர்வையில் தனது வசதி வாய்ப்புகளை பலமடங்கு கட்டுவித்து கொண்டார்.

அதுவும் குஜராத் கலவரம் நடந்த நாளன பிப்ரவரி 28 வந்து விட்டால் போதும் , தீஸ்தா செதல்வாட் மற்றும் அவரை போன்ற என்.ஜி.ஓ., க்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான், கலவரத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலிசெலுத்துகிறோம் , பாதிக்க பட்டவர்களுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் நிகழ்சிகளை நடத்துவது. ஊடகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் குவிய செய்து பேட்டி தருவது , பாதிக்கபட்ட அப்பாவி மக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது. முடிந்தால் அவர்களது அவல நிலையை குறும்படமாக எடுத்துகொள்வது. பிறகு உதட்டளவில் வாக்குறுதிகளை அள்ளி தெளித்துவிட்டு , தான் எடுத்த புகைப் படங்களையும் , குறும் படங்களையும் வெளிநாட்டில் காட்ட வேண்டியவர்களிடம் காட்டி கறக்க வேண்டியதை கறந்து தங்கள் கஜானாவை நிரப்பி கொண்டு பாதிக்க பட்ட அப்பாவி மக்களை மறந்து விடுவது . மீண்டும் மறுவருடம் ஞானோதயம் வந்து ஓடி வருவது.

இதில் தீஸ்தா செதல்வாட்ட சி.ஜெ.பி., (CJP) என்ற என்.ஜி.ஓ.,வை நடத்தி வருகிறார். இந்த என்.ஜி.ஓ ., கலவரத்தால் பாதிக்க பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை செய்வதாக கூறிக்கொண்டு ஒரு பக்கம் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது . இது போதாது என்று குல்பர்க் சொசைட்டியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைத்து தருவது அல்லது சந்தை விலைக்கு அப்படியே வங்கி அருங்காட்சியகம் (museum) அமைப்பது என கூறி மற்றொரு வசூல் வேட்டையிலும் இறங்கியது . ரூ 1 கோடிக்கும் மேல் வசூலும் செய்து விட்டது ,

ஆனால் காலங்கள் தான் உருண்டு ஓடின ஒரு செங்கல் கூட வந்த பாடில்லை, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அவரது வாக்குறுதி வாக்குறுதியாகத்தான் இருக்கிறது , வசூல் செய்த காசில் வீடுகட்டி தரக்கூட இந்த சமூக சேவகிக்கு மனம்மில்லை. இப்போது இவரது சமூக சேவை லட்சணத்தை கண்டுபிடித்து விட்ட மக்கள் இவர் இந்தவருடம் பிப்ரவரி 28 ஆம் தேதி குல்பர்க் சொசைட்டி பக்கம் வரக்கூடாது என்று தடை விதித்தே விட்டனர்,

"கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிணத்தின் மீதுதான் பணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இது உங்கள் பணம் அல்ல" ஷரிப் ஷேக் (Sharif Shaikh) குல்பர்க் சொசைட்டியில் வசிப்பவர்.

"வசூல் செய்த பணத்தை கலவரத்தால் பாதிக்க பட்டவர்களிடம் பகிர்ந்து கொடுக்க வேண்டும். இது எங்கள் பெயரை பயன்படுத்தி வசூல் செய்த பணம் " பிரோஸ்கான் பதன் (Firozkhan Pathan ) குல்பர்க் சொசைட்டியில் வசிப்பவர்.

புகார் என்பது இவருக்கு புதிதல்ல குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் முக்கிய சாட்சியான ஜகிரா ஷேக்குக்கு உதவி செய்வதாக பழகி அவரை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். பிறகு பாதுகாப்பு தருகிறேன் என்ற போர்வையில் முபைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் இவரது உண்மை முகம் இரண்டு வருடத்திலேயே வெளிப்பட்டு விட்டது . தீஸ்தா செதல்வாட் தன்னை அதிகமாக கட்டுபடுத்து வதாகவும், அவர் கூறுவதையே நீதிமன்றத்தில் சாட்சியாக கூறவேண்டும் என்று தன்னை கட்டாய படுத்துவதாகவும் பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகிரா ஷேக் கடந்த 2005 ஆம் ஆண்டு பொங்கி எழுந்து விட்டார்.

மேலும் இவர் தொண்டு நிறுவனம் நடத்துவதால் கலவரத்தால் பாதிக்க பட்டவர்கள் இவரது உதவியை நாடி வந்தபொழுது உதவி செய்வதாக வெற்று வாக்குறிதியை தந்து வெற்று காகிதத்தில் கையெழுத்தும் வாங்கிகொண்டு "துள்ளத் துடிக்கக் கொலை செய்தார்கள், கதறக் கதற கற்பழித்தார்கள், அவர்கள் எல்லோரும் நரேந்திர மோடியின் ஆட்கள், நான் பயத்தால் பார்த்துக் கொண்டு மட்டுமிருந்தேன்" என்கிற வகையில் எழுதி நீதிமன்றத்தில் அவர்கள் பெயரில் பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்துள்ளார்.

இவருடைய பித்தலாட்டத்தில் இருந்து இவரது முன்னால் உதவியாளர் ரயிஸ்கான் பதான் கூட தப்பவில்லை , ரயிஸ்கான் பதானுக்கு தெரியாமல் அவரது பெயரில் தீஸ்தா அம்மையார் இ-மெயில்களை அனுப்பியும் பெற்றும் மோசடிகளை செய்துள்ளார்.

இப்படி பட்ட இந்த அம்மையாரின் நரேந்திர மோடிக்கு எதிரான கட்டு கதைகளைத்தான் பல்  ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பின. இவர் மோடியை பற்றி தும்மினால் விருது! கொட்டாகை விட்டால் பாராட்டு! அப்படி பட்ட ஒரு ராஜபோக வாழ்க்கை . ஆனால் இவர் எந்த மாநிலத்து மக்களை வைத்து பிழைப்பு நடத்தினரோ அதே மாநில மக்கள்தான் தற்ப்போது இவரை தூக்கி எரிந்துள்ளனர் . நரேந்திர மோடியின் சிறந்த ஆட்சி நிர்வாகத்துக்கு நர்ச்சான்றிதல் தரும் விதமாக மூன்றாம் முறையாக அவரை அரியணையிலும் ஏற்றியுள்ளனர்.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply