ஆந்திர மாநிலத்தில் தனித்தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இன்று ரயில்மறியல் போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக ஆந்திராவிற்கு வந்துசெல்லும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகலை ரயில்வே போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க கோரி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி போன்ற கட்சிகள் போராடி வருகின்றன.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கைபடி நடப்பு பார்லி., கூட்டத்தொடரில் தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட-வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி-வருகின்றனர். இந்த போராட்டத்தில் பா.ஜ.,ராஷ்ட்டிரிய சமிதி , தெலுங்குதேசம், தெலுங்கானா பிரஜா ராஜ்யம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிஸ் கட்சியை சேர்ந்த தெலுங்கானா தலைவர்களும் இன்றைய ரயில்-போராட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

{qtube vid:=KB1Kwd6kzro}

Leave a Reply