காஷ்மீரில் கடந்த 5-மாதமாக நடந்த கலவரத்திற்கு காஷ்மீர் அரசு ஊழியர்கள் சிலருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவருகிறது,

கடந்த சில மாதங்களாக நடந்த கலவரத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தின் முக்கிய மூளையாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு செயல்பட்டது, லஷ்கர்-இ-தொய்பாவுடன் கிரிமினல்களும் போதை பொருள் கடத்துபவர்களும் மற்றும் சில அரசு ஊழியர்களும் பங்கெடுத்து சதி செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்த சுமார் 67 -அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசாங்கதின் உயிர் அரசு ஊழியர்களின் கையில் தான் இருக்கிறது . சிறுபான்மையினரின் வோட்டுக்காக மத்தியஅரசும் , மாநில அரசுகளும் காஷ்மீர் பிரச்சினையில் அமைதிக் காக்கின்றன. இந்தியாவில் உள்ள எந்தமாநில அரசாவது காஷ்மிருக்காக குரல் கொடுத்திருகிறதா? நாமெல்லாம் முட்டாளாஇருக்கிற வரைக்கும் நம்ம நாட்டுல இருக்கின்ற ஒவ்வொரு மாநிலத்திற்கும் அண்டை நாட்டுக்காரன் சொந்தம் கொண்டடிகிட்டே இருப்பான்.

 

Leave a Reply