தமிழக பாரதிய ஜனதா சார்பாக ஏழை இந்து-மாணவர்களுக்கும், சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போன்று கல்வி உதவிதொகை வழங்க பட வேண்டும். கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த-நவம்பர் மாதம் தாமரை யாத்திரை தொடங்கியது.

மாநில-தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழகம் முழுவதும் இரண்டு மாத காலமாக தாமரை யாத்திரை நடைபெற்றது . 31மாவட்டங்களில் 6 லட்சம் மக்களை சந்தித்து பிரசாரம்செய்தனர். தாமரை யாத்திரையின் நிறைவு விழா சென்னை மீனம்பாக்கம் ராணுவமைதானத்தில் இன்று நடைபெற்றது .

மாநில-தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தாமரை யாத்திரையை காலை 11 மணி வாக்கில் நிறைவு செய்தார், அதை தொடர்ந்து சென்னை போராட்டம் என்ற பெயரில் மிக பிரமாண்டமான பொது கூட்டம் நடைபெற்றது .

இதில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர். எதிர்பார்த்ததை விட அதிகஅளவில் தொண்டர்கள் வந்ததால் ராணுவ-மைதானம் நிரம்பி வழிந்தது. சென்னை போராட்டத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி சிறப்புரை ஆற்றினார்.

இதில் நிதின் கட்காரி பேசியதாவது ;

  தமிழகத்தில் விலைவாசி உயர்வும், ஊழலும், தான் முக்கிய பிரச்னை , ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுக,வை பிரபலபடுத்திவிட்டது. விலைவாசி உயர்வு பொது மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 2010 -ம் ஆண்டு ஊழல் ஆண்டாக சென்றுள்ளது.ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த், என்று ஊழல் பட்டியல் நீண்டுகொண்டு இருக்கிறது . இரண்டரை லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது . இது நாட்டின் மொத்த-உள்நாட்டு உற்பத்தியில் 3சதவீதம்.

சுப்ரீம் கோர்ட்டு, எதிர்க்கட்சி மற்றும் பொதுமக்களும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, 22 லட்சம்கோடி டாலர் கருப்புபணத்தை மீட்க வேண்டும் என கூறுகின்றன. ஆனால், கருப்புபணத்தை குவித்து வைத்துள்ளவர்களின் பட்டியலை காங்கிரஸ் அரசு வெளியிடாமல், அவர்கள் மீது அன்பு செலுத்துகிறது. தேச துரோகிகளுக்கு இந்த அரசு துணை போகிறது.

தமிழகத்தில் மட்டும் அல்ல வெகுவிரைவில் மத்தியிலும் தேர்தல் நடைபெறும் . பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி ஏற்படும். அப்போது கருப்பு பணத்தை மீட்டு, அதில் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் .

இலங்கை தமிழர்-பிரச்னை ஒரு தேசிய பிரச்னையாகும் . இலங்கை தமிழர்களின் அடிப்படை உரிமையை பெற, பார்லிமென்ட்டில் பாரதிய ஜனதா,வின் 165 எம்.பி.,க்களும் குரல் கொடுப்பார்கள். ஐ.நா சபை உரிமைகுழுவிற்கு இந்த பிரச்னை கொண்டு செல்வோம். நாட்டின் பொருளாதார சூழ்நிலை உயர, நதிநீர் பிரச்னை தீர, ஏழை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற தமிழக மக்கள் பா.ஜ.,விற்கு முழு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்

{qtube vid:=7zW_DubtVws} =======================================================

{qtube vid:=ESWQvwnpw6I}

=======================================================

{qtube vid:=HGB7ZW-KkJU}

======================================================

 

{qtube vid:=iMAB9vDPQ3o}

Leave a Reply