வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம்   சனாதன தர்மத்தை வேறருக்கிறோம், இந்துத்துவாவை. அழிக்கிறோம் என்று இந்து மதத்தின் புனிதத்தின் மீது தாக்குதல் நடத்தும் திருமாவளவன்கள் பொது வாழ்வுகளிலிருந்து நிராகரிக்கப்பட வேண்டியவர்கள்

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகளின் மாநில மகளிர் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் திருமாவளவன், கூம்பு வடிவில் இருந்தால் அது இஸ்லாமிய வழிபாட்டு அடையாளம். அதே கொஞ்சம் நீளமாக இருந்தால்  கிறிஸ்தவ வழிபட்டு அடையாளம்,  அசிங்கமான சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்களின் அடையாளம் என்று பேசியுள்ளார். இதன் மூலம் அவர்   சிலைகளை இறைவனின் வடிவங்களாக ஆராதிக்கும் இந்துக்களின் நம்பிக்கையை ,  பன்னிரு நூற்றாண்டுகளுக்கு முன்பே அச்சிலைகளை  இறை பக்தியுடன் கடும் நோன்பிருந்து கலைநயத்துடன் செதுக்கிய சிற்பிகளின் தியாகத்தை, இதற்காக  ஆக்கமும் ஊக்கமும் பெரும் பொருட் செலவும் செய்த பேரரசர்களின்  அர்ப்பணிப்பை ஒருசேர அவமதித்துள்ளார். Image may contain: 3 people, including Jeya Kumar T, people standing, beard and text

அரை நிர்வாணமே ஆடைகளாகி போன ஐரோப்பிய சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் கலைநயம். ஆபாசமற்ற ஆடைகளே  கலாச்சாரமாகி போன இந்தியருக்கு தெரியும் கலைநயம், முழு இருட்டே காட்சியாகிப்போன பார்வையற்ற சகோதரன் தொட்டுணர்ந்து மகிழும் கலைநயம். இவர்களுக்கு மட்டும் அசிங்கமாக தெரிவது எனோ?.

ஒரு மத (இந்து மத) வேடமணிந்து, ஆதாயத்திற்காக தாய் மதத்தையே  கேவலப் படுத்தும், மாற்று மதத்தை துதிபாடும்  திருமாவளவன்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டியவர்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், பல சமூக பிரச்சனைக்கு மூல வித்தாக கூடியவர்களும் கூட .

உதாரணத்திற்கு சமீபத்திய நிகழ்வை கூட எடுத்துக் கொள்வோம், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் சமயோதிதமான தீர்ப்பை பாராட்டாதார் யாரும்  இல்லை .   எதிர் மனுதாரர் கூட தங்களுக்கு எதிரான தீர்ப்பை மிகவும் கண்ணியதுடன்  ஏற்று கொண்டனர்.  பெரும்பாலான  இஸ்லாமி அமைப்புகள்,  மதகுருமார்கள் எதிர்மறை கருத்துக்களை தவிர்த்தனர்.  பாபரின் பேரன் ஒரு படி மேலே சென்று இராமனின் கோவில் கட்டுமானத்துக்கு தங்க கல்லையே தந்து எங்கள் பாவத்தை போக்குவோம் என்றார்.

இதில் பரிதவித்தவர்கள் . இந்த தீர்ப்பினால் இந்தியாவே கலவரக் காடாகி போகும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போன பாகிஸ்தான் பத்திரிக்கைகள், இந்தியாவின்  ஒவ்வேசிகள் உள்ளிட்ட ஒரு சிலரே. இவர்களில் தமிழகத்தின்  திருமாவளவனும் உள்ளடக்கம்.தீர்ப்பு நாளன்று தீர்ப்புக்கு எதிராக இவர்கள் உதிர்த்த முதிர்ச்சியற்ற வன்முறைக்கு வித்திடும் பேச்சுக்களும், இதைக் கண்டு காங்கிரஸ் உள்ளிட்டபெரும்பாலான கட்சிகளின் முக்கிய தலைவர்களே  முகம் சுளித்ததும். தொலைக்காட்சி நெறியாளரே சற்று நெளிந்து இடையில் விளம்பரத்தை போட்டு நிலைமையை சமாளித்ததும் நாம் நேரலையில் கண்ட நிகழ்வே . எனவே தான் கூறுகிறோம் இவர்கள் அணைத்து விதத்திலும் மிகவும் ஆபத்தானவர்கள்.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

Comments are closed.