திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பாஜக தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டதை திமுக பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியதும். திவள்ளுவர் இந்துவே இல்லை என்றதும். நாதிக்கர் தான் அவர் என்ற கருத்தை வலுப்படுத்த முயல்வதும் அவர்களது வன்மத்தையே காட்டுகிறது. அவர்களது பொய்யான வரலாற்று திரிப்புகளுக்கு முடிவு நெருங்குகிறது.

திருவள்ளுவர் கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் அவர் 1330 குரல்களை இயற்றியுள்ளார். அதில் அறம் அன்பு கல்வி காமம் குரோதம் ஆரோக்கியம் பிணி செல்வம் வறுமை தொழில் வளமை உணர்வு, நட்பு, பகை என்று அவர் தொடாத துறைகளே இல்லை.

இருப்பினும் அவர் ஆன்மிகத்துக்கும் மதத்துக்கும் முக்கியத்துவம் தர மறுத்துவிட்டார் அதே நேரத்தில் முற்றிலும் புறக்கணித்து விடவும் இல்லை ஆங்காங்கே வெகு சில இடங்களில் மேற்கோள்களுடன் தழுவியே உள்ளார்.உலகில் எல்லோரும் ஜாதி, மத இன வேறுபாடுகளை கடந்து இதை பருக வேண்டும், உயர் குணங்களை பெற வேண்டும் என்ற எண்ணங்களின் வெளிபாடு தான் அது. உலகப் பொது மறையாக திருக்குறள் இன்று போற்றப்படுவதே இதற்கு சான்று. . ஆனால் சிறுமை புத்தி கொண்ட சிலர் இதை பயன்படுத்தி அவரை நாத்திகனாக்க காட்டுகின்றனர்.. அவரது திருவுருவம் இன்றும் ஓலைச்சுவடி ,வடிவிலோ, கல்வெட்டாகவோ கிடைக்கப்பெற வில்லை. இதை சாதகமாக்கிக் கொண்ட திராவிட கூட்டத்தின் கொள்கை திணிப்பு தான் தற்போதைய வள்ளுவனின் மதசார்பற்ற வடிவம்..

இதை வரைந்தவர் வேணுகோபால் சர்மா என்ற உத்தமர், வரையப்பட்ட காலம் 1959. திருவள்ளுவருக்கு முழு உருவத்தை படைக்க 40 வருட காலத்தையும், பெரும் செல்வத்தையும் செலவழித்தவர். . அவரிடம் குறை ஒன்றையும் காணோம். ஆனால் அன்று ஆதிக்கத்திலிருந்த திராவிட கூட்டத்தின் நிர்ப்பந்தத்தால் அன்றைய திருவள்ளுவன் திருநீரையும், மாலைகளையும், ருத்ராட்சங்களையும், கையில் கயிறுகளையும் துறக்க வைக்க பட்டிருக்கலாம்.. அன்று அது சாதாரணமாககூட எடுத்துக் கொல்லப் பட்டிருக்கலாம்.

ஆனால் இன்று அதையே காரணமாகக் கொண்டு ஒரு கூட்டம் வரலாற்றையே திரிக்க துடிக்கிறது நாத்திகத் திருவள்ளுவர், கிருத்தவ திருவள்ளுவர், இந்து மறுப்பு திருவள்ளுவர் என்று திரிபு நீள்கிறது.

அவரை வேற்றுமதத்தவரா காட்ட 20 வருடங்களாக ஆராய்ச்சிகளும், பொய்யான ஆதாரங்களும் வரிசை கட்டுகின்றன இது மறுக்க பட வேண்டிய தருணம். உண்மைகளை உணர்த்த வேண்டிய தருணம். பாஜக அதைத்தான் செய்துள்ளது, பொய்யொன்றும் உரைக்க வில்லை.

வள்ளுவரின் உருவம் எப்படி இருக்கும் என்று பழங்காலப் பாடல் ஒன்று சொல்கிறது.

“திருமுடிமிசையார் மயிர்முடியழகுத் தீர்க்கபுண் டரநுத லழகும்
..திகழ்நெடுந் தாடியி னழகும்
அருமுடி செபமா லிகைசின்முத் திரைசேரபயநேர் வலக்கையி னழகும்
அமிழ்துறழ் தமிழ்மா மறைமுறை வரதமமைதரு மிடக்கையி னழகும்
மயிலையி னிடைமாதவர்கள்கண் டிறைஞ்சவீற் றிருக்கும்
திருவள் ளுவரெனு நாம சற்குரு சரணமே”

பாடல் என்ன சொல்கிறது. திருவள்ளுவர் தலையை நெடுமுடியாகப் புனைந்துள்ளார்.நெற்றியில் திருநீறு விளங்குகிறது. நெடுந்தாடி அவருக்கு உள்ளது. வலக்கையில் சின் முத்திரையோடு செபமாலை உள்ளது. இடக்கையில் தமிழ் மறையாம் திருக்குறள் உள்ளது.

அவர் நாத்திகர் அல்ல இந்து என்பதற்கான சான்று 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி 25

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று .
இங்கு இந்து கடவுளான இந்திரனை குறிப்பிடுகிறார்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல் 84

இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள். கலைமகளை குறிப்பிடுகிறார்.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 62

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா. -மு வ உரை.
இங்கு ஏழு பிறவி என்பது இந்து மத நம்பிக்கை.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.107

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர் -மு.வ உரை:

இதனை வள்ளுவரும் ” உள்ளத்தால் உள்ளலும் தீதே” என்றும், உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்” என்றும் கூறுகிறார். அது மட்டுமல்ல “ வினைப்பகை வீயாது பின்சென்று அடும்” என்கிறார்.
நாம் எங்கு ஓடிச் சென்றாலும் நாம் செய்த வினையின் பயன் நம்மை நிழல்போல பின் தொடர்ந்து வந்து தாக்கும் ” என்கிறார்.

வள்ளுவர் ஹிந்துமதத்தில் நம்பப்படும் ஏழு பிறவிகள் அல்லது ஏழு ஜன்மங்கள் பற்றி குறிப்பிடுவதை நாம் உணர வேண்டும். பெரியாரின் சீடர்கள் இந்த பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என்பதை ஏற்றுக் கொள்வார்களா?. கலைமகள், இந்திரனை எல்லாம் வணங்குவார்களா?.

சமீபத்தில் பீட்டர் அல்போன்ஸ் ஒரு பத்திரிகையில் முதலில் வேணுகோபால் சர்மா திருவள்ளுவர் ஓவியத்தில் பூணுலை வரைந்து விட்டதாகவும், பின்னர் கலைஞரின் ஆலோசனையால் வெள்ளை துணியை வரைந்து மறைத்ததாகவும் பொய்யுரைத்திருந்தார்.. இது ஆதாரமற்றது என்று எதிர்ப்பு வலுக்கவே. நான் இதை ஏதோ ஒரு நூலில் படித்தேன், பூணூல் ஓவியத்திலா அல்லது சிற்பத்திலா என்பதை மறந்து விட்டேன் , நூலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று பல்டி அடித்துவிட்டார். இதுதான் இவர்களுடைய வரலாற்று திரிபு. முதலில் கற்பனையை கலந்து விடுவது , அதை யாரும் கண்டுகொள்ள வில்லை என்றால் அதையே வரலாறாக்கி விடுவது. அதையே அழுத்தி ஆதாரத்தை கேட்டால் சான்றை தேடி ஓடி விடுவது இதுவே திராவிடம்.

நன்றி;- தமிழ் தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.