கிரிவல மகிமை மற்றும் கிரிவலத்தின் பொது கடைபிடிக்க வேண்டிய கிரிவல நியதிகள்அண்ணாமலையின் கிரிவலம் எல்லா உலகங்களையும் வளம் வந்ததற்குச் சமமாகும். பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரு தோணி தேவை. அத்தோணி என்பது திருவண்ணாமலையின் கிரிவலம்தான் .அது ஏழு விதமான நரக குழிகளில் விழுந்து விடாமல் முக்தி என்னும் மோட்ச வீட்டை அடைவதற்கு ஏணியாக இருந்து உதவி செய்கிறது இந்த கிரிவலம்.

இந்த அருணாச்சலத்தை வலம் வருவதால் கிடைக்கின்ற பலன்களுக்கு நிகராக வேறு பலன்களைச் சொல்ல இயலாது. காசி, அயோத்தி, மதுரை, மாயாபுரி, அவந்தி, துவாரகை, காஞ்சிபுரம் முதலான புண்ணிய நகரங்களில் ஒரு கற்பகாலம் (432 கோடி ஆண்டுகள் ) தவம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட அருணாச்சல கிரிவலத்தால் கிடைக்கும் நன்மை மிக அதிகம்

இந்த அருணா கிரிவலமானது பல ஆண்டுகள் அருந்தவம் செய்து பெறுகின்ற நன்மைகளை விட ஒரு முறை கிரிவலம் வருவதால் அதிக நன்மைகள் பெறலாம். குருமூர்த்தி சொல்லியவாறு சமாதியிலிருந்து அடைகிற அஷ்டமாசித்திகளை விட இந்தக் கிரிவலம் வருவதால் அதிக சித்திகளை பெறலாம்.

அகன்று ஓடும் நர்மத நதி அளவு கள்ளைக் குடித்த பாவம் கூட திருவன்னமலையை வலம் வந்தால் தீர்ந்துவிடும்.

அண்ணாமலையை வளம் வரவேண்டும் என்று நினைத்தாலே போதும்.அந்த கணமே சூறாவளி காற்றுக்கு முன் உள்ள தீபம் அணைந்து போவது போல அவனுடைய் பாவங்கள் அணைந்து போய்விடும்.

நாம்நல்ல கல்விச் செல்வத்தைப் பெற விரும்பிநாளும், நல்ல மழலைச் செல்வத்தை பெற விரும்பினாலும் , அரசர்/அரசாங்கத்தை வயபடுத்த விரும்பினாலும்,நல்ல மாதரை பெற விரும்பினாலும் இந்த திருமலையை அவசியம் வலம் வருதல் வேண்டும்.

திருவண்ணாமலை கிரிவல நியதிகள் :

கிரிவலம் என்பது விரைவாக கடந்து அல்லது விரைவாக ஓடிமுடிக்க வேண்டிய ஒரு வழிபாடு அல்ல. அது ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் நடப்பதைப் போல மெதுவாக அடி மேல் அடி வைத்து மிக பொறுமையாக வலம் வர வேண்டும்.

நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் ஒவ்வொரு காலசைவும் ஒரு முக்கியத்துவம் பெறுவது போல திருவண்ணா மலையின் கிரிவல யாத்திரையில் ஒவ்வொரு அடியும் முக்கியத்துவம் பெறுவதாகிறது.

திருவண்ணா மலையை வலம் வரும்போது அன்று பெண்களின் சேர்க்கைப் பற்றி கனவிலும் நினையாத வண்ணம் தூய்மையான நீரில் நீராடி தூய்மையான ஆடையுடுத்தி விபூதி அணிந்து மெளனமாக வலம் வருதல் வேண்டும்.

இந்த கிரிவலத்தின் போது உடம்பில் சட்டையோ போர்வையோ அணிவது கூடாது.வெயிலுக்கோ அல்லது,மழைக்கோ குடைப் பிடித்து கொண்டு போகக்கூடாது.கால்களில் மிதியடிகளும் அணியக்கூடாது . காரணம் வழியெங்கும் அரூப வடிவில் சித்தர்கள் சிவலிங்கங்களை ஸ்தாபித்து வழிப்பட்டு, வலம்
வந்து கொண்டிருப்பர். ஆதலால் அவர்களின் வழிபாடு ஏதும் பாதிக்க படக்கூடாது. என்ற எண்ணத்துடனே கிரிவலத்தைத்துவங்க வேண்டும்.

மலை வலம் வருகிறவர்கள் மலை வலத்தின் போது தானங்கள் செய்யலாமே தவிர பிறரிடம் இருந்து தானங்கள் எது பெறக்கூடாது என்பதும் எந்தவித வாகனங்களும் மலை வலம் கூடாது என்பதும் முக்கிய நியதியாகும். இதுவே இப்படிஎன்றால் தாம்பூலம் தரித்தல், போதை பொருட்களை உபயோகித்தல் கூடாது. உணவு உண்ணுதலுக்கு கூட கிரிவலத்தின் போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணா மலையைக் கிரிவலம் வரும் முறையில் லட்சத்து எட்டு வகைகள் உண்டு என புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு கிரிவல முறைக்கும் ஒவ்வொரு விதமான தெய்வீகப் பலன்கள் உண்டு . கிரிவலம் செய்கின்ற நாள், நட்சத்திரம் ஆகியவற்றைப் பொறுத்து பழங்கள் மாறுபாடடையும் .

இப்படிப் பல்வேறு கிரிவல முறைகள் இருந்தாலும் சித்தர்கள் சிறப்பாக வலியுறுத்துவது அமாவாசை மற்றும் பௌர்ணமி கிரிவலங்களை மட்டுமே. முன்பெல்லாம் அமாவாசை ,பௌர்ணமி நாட்களில் மட்டுமே கிரிவலம் நடைப்பெற்றது. இப்போது மாதத்தின் எல்லா நாட்களிலும் கிரிவலம் நடைபெறுகிறது.

கோயிலின் உள்ளே தெற்குக் கோபுர வாயிலருகே உள்ள பிரம்ம லிங்கத்தில் தொடங்கி ,தெற்கு வாசல் வழியிய வெளிவந்து கிரிவல பாதையில் அமைந்துள்ள பலவேறு ங்கங்கள், ததீர்த்தங்கள், நந்திகள், ஆகியவையை தரிசித்தவாறே இரட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகிய அமைந்துள்ள பூத நாராயணர் சந்நிதியில் யாத்திரையை முடிப்பதுதான் முழுமையான கிரிவலம் என்று கூறப்படுகிறது.

கிரிவலம் வந்த பின்னர்,அண்ணாமலையார் ஆலயத்தின் உட்ப்ரகாரத்தில் கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள துர்வாசமுனிவரை வணங்கி , பின்னரே அண்ணாமலையாரையும்,பின்னர் உண்ணாமுலையம்மயாரையும் தரிசித்தல் வேண்டும்.

திருவண்ணமலை கிரிவலத்தின் தனி சிறப்பு எனவென்றால் இங்கு வருடத்தின் எல்லா நாட்களிலும் பகலோ, இரவோ,அந்தியோ, சந்தியோ,வெயிலோ,மழையோ , என்ட்ஜ்ஹா நேரமும் யாரவது ஒருவர் கிரிவலம் வந்தவாறு இருப்பார்கள் .

கந்தவர்கள் , தேவர்கள், மகரிஷிகள் சித்தர்கள், வேற்றுலகவாசிகள் ஆகியோர் இந்த மலையை பூலோக நியதிகளுக்கு ஏற்றவாறு மானுட வடிவிலோ அல்லது அரூப வடிவமாகவோ கிரிவலம் செய்த வண்ணம் இருப்பார்கள்.

இதில் ஆச்சர்யப்படத்தக்க செய்தி என்னவென்றால் நாம் இம்மலையை கிரிவலம் செயும்காலங்களில் இவர்கள் நம் கண்ணங்களில் அபூர்வமாக தென்படுவார்களாம்.அவர்களை இனம் காணும் கொடுப்பினை இருந்தால் நமக்கு அவர்களின் அருளாசியும் கிடைக்குமாம்

கிரிவலம் வருவது ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு அதை பற்றி அடுத்து பார்போம்….

ஓம் நமச்சிவாய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *