கறைபடிந்த ஊழல் கண்காணிப்பு கமிஷனரை மத்திய அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது என பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா செய்தி-தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் :
தாமஸ் மத்தியஊழல் கண்காணிப்பு கமிஷனராக நியமிக்கப்பட கூடாது என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வந்தது. தாமசை தவிர யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். ஆனாலும் பாரதீய ஜனதா வின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தாமசை ஊழல் கண்காணிப்பு கமிஷனராக நியமித்தது .
கேரளாவில் பாமாயில்-இறக்குமதியில் நடைபெற்ற ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில் தாமசின் பெயர் இடம் பெற்று இருக்கிறது .
தாமஸ் நியமனம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியும் கூட மத்திய அரசு அரசாங்கம் தளரவில்லை.
ஊழலை எதிர்த்து சோனியா காந்தி தீட்டிய 5அம்ச திட்டம், தாமசுக்கு பொருந்தாதா. மத்திய அரசு தொடர்ந்து தாமசை தாங்கிவருவதற்கு காரணம் என்ன?. என்று பா.ஜ. கேள்வி எழுப்பியுள்ளது.
{qtube vid:=3untBiSZVh8}