இந்தியாவில் தூய்மையை மேம்படுத்தும் விதமாக பிரதமரின் தூய்மை இந்தியாதிட்டத்தின் வெற்றியை கட்டமைக்க இதுவே சரியானதருணம் என மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நாடுமுழுவதும் தூய்மையை மேம்படுத்த முக்கிய பங்காற்றியுள்ளது. எனவே அதன் வெற்றியில் இருந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை கட்டமைக்க இதுவே சரியானதருணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.  

இதேபோன்று இந்தியா முழுவதும் ஊட்டச் சத்து குறைபாட்டினை குறைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் பில் கேட்ஸ் தனதுவாழ்த்தினை தெரிவித்துள்ளார். அப்போது இந்நடவடிக்கைகளை மேற்கொண்டது தொடர்பாக பிரதமர் மோடியை பாராட்டினார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடியால் தூய்மை இந்தியா திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதன் கீழ் நாடுமுழுவதும் 5 லட்சம் கிராமங்களில் இருந்த திறந்தவெளி கழிப்பறைகளை அகற்றி, இதுவரை சுமார் 8 கோடி கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply