இரண்டு நாட்களாக மதுரையல் முகாமிட்டு, மாவட்டவாரியாக நிர்வாகிகளை சந்தித்து கூட்டணிக்குறித்து கேட்டறிந்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்,
மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த முக்கியநிர்வாகிகள், தொண்டர்களிடம் தனி தனியாக கருத்துகளை கேட்டார். பெரும்பாலான தொண்டர்கள் அ.தி.மு.க.,வுடன் கூட்டணிவைக்க வேண்டும், என்று தெரிவித்தனர். தேர்தலை தனியாக சந்திக்க பொருளாதார வசதிகள் இல்லை என பலர் சுட்டி காட்டினர். சிலர் காங்., தலைமையில் தனி அணி அமைக்காலம் எனவும் தெரிவித்தனர்.
அனைவரின் கருத்து களையும் கேட்ட விஜய காந்த், கூட்டணிகுறித்து இப் போது குழம்ப வேண்டாம். ஜனவரிவரை பொறுத்திருங்கள். தனித்து போட்டியிடும்\ வகையில் தேர்தல் ஏற்பாடுகளை செய்யுங்கள். தொண்டர்கள்மக்கள் விரும்ப கூடிய கூட்டணியை ஏற் படுத்துவேன்’ என தெரிவித்தார்.
ஒரு பக்கம், தனித்து போட்டியிடும் வகையில் ஏற்பாடுகளை செய்யுங்கள் என்கிறார்; மற்றொரு பக்கம்,கூட்டணி வரும் என்றார். இதில் எது நடக்க போகிறதோ; ஒண்ணும் புரியல ‘ என தொண்டர்கள் மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர்.