வரவிருக்கும் மக்களவைத்தேர்தலில் வலுவான கூட்டணியின் அங்கமாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை சந்திக்கும்.

அதில் மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். மக்களின் பங்களிப்போடு ஆட்சிநடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பின்தங்கிய ஜவுளித்துறையை பாஜக அரசு தான் மேம்படுத்தி வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை, ஊழலுக்கான கூட்டணி.
10 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கமாக இருந்த திமுக தமிழகத்திற்காக என்ன செய்தது?.மக்களவைத் தேர்தலை இரண்டு கூட்டணிகள் சந்திக்கப்போகின்றன ஒரு கூட்டணி பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைந்துள்ளது. மற்றொரு கூட்டணி காங்கிரஸ்கட்சி தலைமையில் அமைந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஐந்தாண்டு காலம் இந்திய மக்களின் நலனுக்காக பாடுபட்ட கூட்டணி தன்திறமையை மக்கள்மத்தியில் நிரூபித்திருக்கிறது.

இரண்டாவது முறை இந்தகூட்டணி வெற்றி பெறும்பொழுது அதன் தலைவராக பிரதமர் நரேந்திரமோடியே மறுபடியும் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் சந்தேகமில்லை.

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு யார் தலைவர் என்று இந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூறமுடியுமா? தங்கள் கூட்டணிக்கு கொள்கை என்ன? நீண்டகால தொலை நோக்குப் பார்வையில் அவர்கள் கொண்டுள்ள அரசியல் தத்துவம் என்ன என்று கூற முடியுமா? அவர்களால் கூற முடியாது.

எனவே கொள்கையற்ற தலைவர்கள் நிறைந்த ஒரு எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவானதா? பாஜ கட்சி தலைமையிலான கூட்டணி வலுவானதா?

இந்த பின்னணியில் பார்க்கும்போது பாஜக வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும், வெற்றிபெறும். இதில் சந்தேகமில்லை.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா  ஈரோட்டில் பேசியது

Leave a Reply