ம.பி., மாநில முதல்வர் சிவராஜ்சிங் செüகானுக்கு எதிராக வலிமையான வேட்பாளரை நிறுத்துவதில் காங்கிரஸ்கட்சி தோல்வி அடைந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து திக்விஜய்சிங் கூறியது:
மத்தியப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இந்த மாதம் 25-ஆம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் செüகான், புத்னி, விதிஷா உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். இந்த தொகுதிகளில் இவருக்கு எதிராக வலிமையான வேட்பாளரை காங்கிரஸ்கட்சி மேலிடம் நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் புத்னிதொகுதியில் மகேந்திரசிங், விதிஷா தொகுதியில் சஷாங்க்பார்கவா ஆகிய புதுமுகங்களுக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. காங்கிரஸ் திட்டமிட்டு செயல்படா விட்டால் சட்டப்பேரவைத் தேர்தலில் செüகானைத் தோற்கடிக்க இயலாது என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

One response to “சிவராஜ்சிங் செüகானுக்கு எதிராக வலிமையான வேட்பாளரை நிறுத்துவதில் காங்கிரஸ்கட்சி தோல்வி”

Leave a Reply