உமா பாரதி மீண்டும் பாரதிய ஜனதாவுக்கு திரும்பி வருவார் என கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

மத்ய பிரதேஷ் முன்னாள் முதல்வர் உமாபாரதி பாரதிய ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2005 – ம் ஆண்டு  பாஜகவில் இருந்து வெளியேறினார்

இன்னிலையில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி தனது இணையதளத்தில் தெரிவித்ததாவது ; உமாபாரதி என்னிடம் பேசினார். கட்சிக்கு திரும்பும்படி அவரை வலியுருத்தினேன்   இதை ஏற்றுக் கொண்ட  அவர் விரைவில் பாஜகவில் இணைவார். மத்ய பிரதேஷ் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாகவும் உமா பாரதி என்னிடம் தெரிவித்தார் என அத்வானி தெரிவித்துள்ளார்.

Leave a Reply