முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மூன்று அண்டுகளுக்கு முன்பே , “பாரத ரத்னா’ விருது வழங்கபட்டிருக்க வேண்டும் என தேசிய முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார் .

முன்னாள் தேசிய பாதுகாப்புஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, பத்ம விபூஷண்’ விருதுக்கு தேர்ந்தெடுக்க செய்யப்பட்டுள்ளார்

. செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் . தெரிவித்ததாவது :

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்திய அரசியலில் பெரும் பங்காற்றி உள்ளார். இந்திரா காந்திக்கு அடுத்து, அவர் மிகச்சிறந்த பிரதமராகவும் இருந்தார் . மற்ற அரசியல்-தலைவர்கள், அரசியல்வாதிகளாகவே இருக்கின்றனர் ஆனால், வாஜ்பாய்யோ அரசியல் மேதையாகத் திகழ்கிறார். அவருக்கு நாட்டின் உயர்ந்த விருதான,பாரத ரத்னா விருது 3 அண்டுகளுக்கு முன்பே வழங்கபட்டிருக்க வேண்டும். தற்போது பாரத ரத்னா தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போதுஎழுந்துள்ளது.இவ்வாறு பிரிஜேஷ் மிஸ்ரா கூறினார்.

Tags:

Leave a Reply