இந்தியாவுக்கு வருகைதந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். பொருளாதார ரீதியாக மட்டும் உலகம் இணைந்திருக்க வில்லை. இப்போது கலாசார ரீதியாகவும் உலகம் ஒன்றிணைந்துள்ளது.

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. இந்த உலகத்திற்கு பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது. மிகத்தொன்மையான பாரம் பரியமிக்க கலாசாரத்தையும், செழுமையையும் கொண்ட நாடு இந்தியா. எனவேதான் உலக நாடுகள் இதுபோன்ற தேவைகளுக்காகவும் இந்தியாவை நாடுகின்றன. அவற்றையும் நாம் நிறைவு கொள்ள வேண்டும். எனவே, நமது கலாசாரத்தை நினைத்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். நமது கலாசாரத்தின் பெருமையை வளர்க்கும் பணியிலும், சர்வதேச அளவில் அதனை எடுத்துச் செல்லும் சேவையிலும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்றவர்கள் ஈடுபட்டுள்ளனர்


உலகம்முழுவதும் இந்தியாவின் பாரம்பரியத்தை பரவச்செய்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு எனது பாராட்டுக்கள்.
எல்லாவற்றையும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால்?, நமது கலாசாரத்தை நாமே குறை கூறினால்?, உலக நாடுகள் எவ்வாறு நம்மை திரும்பி பார்க்கும் வாழும் கலை வாயிலாக இந்தியாவை உலகம் அறிந்துகொண்டுள்ளது.

நமது கனவுகளை முன்னெடுத்து செல்ல வாழும்கலை அவசியம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. மங்கோலியாவுக்கு நான் சென்றிருந்த போது வாழும் கலை அமைப்பைசேர்ந்த ஒரு குடும்பம் என்னை வரவேற்றிருந்ததை என்னால் மறக்கமுடியாது.

சர்வதேச உறவுகளை மேம்படுத்த இது போன்ற ஒரு கலாசார திருவிழா முக்கியமானது. இந்நிகழ்வை கலாசாரங்களின் கும்பமேளாவாகவே நான் பார்க்கிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் "வாழும் கலை' அமைப்பு சார்பில், தில்லியில் யமுனை நதியோரச் சமவெளியில் "உலகக் கலாசாரத் திருவிழாவில்" கலந்து கொண்டு பிரதமர் பேசியது.

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.