வாழ்வை வென்றவர் மறைந்துவிட்டார். 5ந்து முறை முதல்வராக, மாநில அரசியலில் இருந்து கொண்டே இந்தியாவின் 3வது மிகப்பெரிய கட்சியாக, பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று ஒரு தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளிலும் வென்றவராக, தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடியவராக, அடித்தட்டு மக்களின் வாழ்வில் அதிக தாக்கத்தை பெற்றவராக வளம் வந்த முதல்வர் ஜெயலலிதா இன்று நம்மிடம் இல்லை. நம் நிகழ்கால, வாழ்க்கைப் பயணத்தில் சம காலத்தில் நம்முடன் பயணித்தவர் இன்று நம்மிடம் இருந்து விலகிச்சென்று விட்டார்

 

ஒரு சரித்திரம் சாய்ந்தது என்பதை விட. ஒரு சரித்திரம் முழுமைப் பெற்றுள்ளது என்று கூறலாம்  சிறு வயதில் தந்தையை இழந்த போதிலும், தாய் சினிமா துறையில் இருந்த போதிலும். கல்வியில் சிறக்க வேண்டும், வழக்கறிஞராக, ஒரு சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்ற வேட்க்கையுடனே வளர்ந்தவர். 10ஆம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று தங்க மடல் பெற்று தனது வேட்க்கையின் வீரியத்தைக் காட்டியவர் இந்த தங்கத்தாரகை.

 

இருப்பினும் குடும்பச் சூழலால், நிர்பந்தத்தால் கல்வியைத் துறந்து சினிமா துறைக்குள்  நுழைந்தவர் அதிலும் 100க்கும் அதிகமான படங்களில் நடித்து முத்திரைப் பதித்தார். அதில் 80 சதவிதத்துக்கும் அதிகமான படங்கள் பெரும் வெற்றிப்பெற்று வசூலை அள்ளியது.

பின்பு சினிமா துறையில் எம்.ஜி.ஆர் உடனான நட்பு இவரை அரசியலுக்கு இழுத்தது. அஇஅதிமுக.,வில் கொள்கைப் பரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் என பல பொறுப்புகளைப் பெற்று அதிலும் முத்திரைப் பதித்தார்.

 

தகுதி உள்ளது தப்பி பிழைக்கும் என்ற சொற்றொடருக்கு இணங்க  அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவை தொடர்ந்து அவரது இறுதி அஞ்சலிக்காக அணிவகுத்திருந்த  அலங்கார இராணுவ வாகனத்தில் இருந்து உட்கட்சி எதிரிகளால் அன்று தள்ளிவிடப்பட்டு, இறக்கிவிடப்பட்டு அவமானப் படுத்தப்பட்ட அதே ஜெயலலிதா!, இன்று மத்திய அரசின் முழு இராணுவ மரியாதையுடன் அதே வாகனத்தில் முதல்வராக தனது இறுதி பயணத்தை முடித்துக் கொண்டது ஒரு சரித்திர சாதனை!!.  

மக்களால், ஊடகங்களால் அளவுக்கு மீறி தவறாக புரிந்துக் கொல்லப்பட்ட தலைவர். அவரை கடுமையாக எதிர்த்த, விமர்சித்தவர்களின் கண்களில் இருந்து கூட நீரை நம்மால் காண முடிந்தது. நடப்புக்கு புது இலக்கணம் கண்டவர்.  மிக மிக நெருக்கடியான காலக் கட்டத்தில் தோல் கொடுத்த தோழியையும், அவரது குடும்ப உறவுகளையும், பல உச்சங்களை தொடர்ந்து தொட்ட போதிலும் இறுதிவரை விட்டுக் கொடுத்ததில்லை. அவர்கள் பல தவறுகளை செய்தபோதிலும் ஓங்கி அடிப்பதைப் போன்று தாங்கித்தான் அடித்தார். இதை அவர்களது செல்வச் செழிப்பும், அதிகார பலமுமே பறைச்சாற்றும்.

சாதாரண நிலையில் உள்ளவர்களும் இங்கே எம்.எல்.ஏ., எம்.பி ஆகலாம், அமைச்சர் ஆகலாம். பதவியையும், அதற்க்கான பொருளுதவியையும் ஒரு சேர தந்த தலைவர். அதே போன்று உச்சத்தில் இருப்பவர்கள் உடனே செல்லாக் காசாவதும். செல்லாக் காசு என்று கருதப்பட்டவர்கள் எல்லாம் உடனடியாக உச்சம் பெறுவதும் இங்கேதான்.

இருப்பினும் அவரது பூத உடல் அருகில்  பெரும், பெரும் பலன் பெற்றவர்கள் எல்லாம் சுற்றி நின்ற போதிலும், கண்ணீரையும், கதறல்களையும் எட்டி நின்று அஞ்சலி செலுத்திய சாமாநியனிடம்  இருந்துதான் காண முடிந்தது. இதுதான் உலகம். ஒரு உண்மையான மக்கள் தலைவனுக்கு (சாமானியனின் கண்ணீர்தான்) இதுதான் வேண்டும், இவர் வாழ்வை வென்றுவிட்டார்

தமிழ்த் தாமரை வி.எம் வெங்கடேஷ்

Tags:

One response to “வாழ்வை வென்றவர் மறைந்து விட்டார்”

Leave a Reply